டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று உலக கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. கொழும்பு மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இந்தியா பேட்டிங் செய்கிறது.

இந்த போட்டியில் அபிஷேக் ஷர்மா மீண்டும் திரும்பினார். கடந்த போட்டியில் அவர் உடல் நலக்குறைவு காரணமாக விளையாடத நிலையில் இந்த முறை அணிக்கு திரும்பினார். இந்த நிலையில் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியின் போது அபிஷேக் ஷர்மா ரன் எதுவும் எடுக்காமல் டக்அவுட் ஆன நிலையில் தற்போதும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளும் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.

பகுதிநேர சுழற் பந்து வீச்சாளர் ஆன பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா வீசிய பந்தில் அபிஷேக் ஷர்மா அவுட் ஆனார். மேலும் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மாவிர் விக்கெட்டை வீழ்த்தியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.