டி20 உலகக்கோப்பை 2026-ன் மிக முக்கியமான இந்தியா – பாகிஸ்தான் மோதல் இன்று கொழும்பில் நடைபெற்று வரும் நிலையில், சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் ரசிகர்களின் வீடியோ ஒன்று காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

அந்த வீடியோவில் பேசும் பாகிஸ்தான் ரசிகர்கள் சிலர், “மனதளவில் நாங்கள் பாகிஸ்தான் அணிக்குத்தான் ஆதரவு தருகிறோம், ஆனால் மூளை சொல்கிறது இந்தியா தான் ஜெயிக்கும் என்று” என மிக யதார்த்தமாகப் பேசியுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by 👻گلاب جامن🎀 (@laraib_ahmed_khan070)

சொந்த நாட்டு ரசிகர்களே தங்கள் அணியின் வெற்றி மீது சந்தேகம் கொண்டு, இந்திய அணியின் பலத்தைப் புகழ்ந்து பேசியிருப்பது இணையத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதைப் பார்த்த இந்திய ரசிகர்கள், “மேட்ச் ஆரம்பிக்கும் முன்பே பாகிஸ்தான் ரசிகர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார்கள்” என கமெண்டுகளைத் தட்டி வருகின்றனர்.

ஏற்கனவே டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ள நிலையில், இந்திய அணி இமாலய இலக்கை நிர்ணயிக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.