உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே எப்போதும் பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான போட்டி என்றாலே மிகுந்த எதிர்பார்ப்பு மற்றும் சுவாரஸ்யம் இருக்கும். அந்த வகையில் கடந்த முறை ஆசிய கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடைசியாக மோதிய நிலையில் இந்தியா கோப்பையை வென்றது.

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கைக்குலுக்கவில்லை. வீரர்களுடன் இந்திய அணி கைக்குலுக்குவதை நிறுத்திவிட்டது. இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் வீரர்கள் கைக்குலுக்குவார்களா இல்லையா என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் கேப்டன்கள் அது போட்டி நடைபெறும் போது தெரியும் என்று சூசகமாக பதிலளித்தனர்.

இந்த நிலையில் தற்போது இலங்கை கொழும்பு மைதானத்தில் போட்டி தொடங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது. மேலும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த கைகுலுக்கல் தற்போது நடைபெறவில்லை. டாஸ் போடும்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் கேப்டன்கள் கைகுலுக்காதது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது