தமிழக முன்னேற்றப்படை கட்சியின் வீரலட்சுமி உங்க மேல 1000 கோடி ரூபாய் முறைகேடு குறித்த புகார் வைக்கிறாங்க என்ற கேள்விக்குபதில் அளித்த அண்ணாமலை, சத்தியமா எனக்கு இந்த வீரலட்சுமி யாருன்னு தெரியாதுண்ணே…  எனக்கு தெரியவே தெரியாது அண்ணா…  எனக்கு தெரிந்த வீரலட்சுமி  கோவில்பட்டியில் ஆங்கிலேயர்கள் இருக்கும்போது ஜாதி வன்கொடுமைகளை  எடுத்து கோவில்பட்டியில் வீரலட்சுமி அம்மா அவர்கள் பெரிய வீராங்கனை…  அவுங்க தான் தெரியும்.

மற்றபடி வீரலட்சுமி… சூர  லட்சுமி…. பங்கார லட்சுமி இது எல்லாம் நம் கோவிலில் சாமியாக தான் பார்க்கிறேன். அதனால் யாருகிட்ட எந்த ஊழல் பட்டியல் இருந்தாலும் தயவு செய்து வெளியிடட்டும். ஏன் வெளியிடுறது என்ன ?  எல்லா இடத்திற்கும் வந்து வீடியோ எடுக்கட்டும். சத்தியமா சொல்றேன் எனக்கு இந்த வீரலட்சுமி யாருன்னு தெரியாது.

நீட்க்கு எதிராக  அவங்க என்ன பண்ணனும் ? சுப்ரீம் கோர்ட்டுக்கு போகணும்…  ரிவ்யூ பெட்டிஷன் போட்டு,  கேன்சல் ஆயிருக்கு. டேட்டா வச்சு  சுப்ரீம் கோர்ட்டுக்கு போனும். சுப்ரீம் கோர்ட்டுக்கு போய்…  சுப்ரீம் கோர்ட்ல  நீட் உண்மையாக கான்ஸ்டியூசனல் ஸ்டேட்டஸ் இருக்கு என அந்தஸ்து  வந்திருக்கு. அதன் பிறகு ஒருமுறை இதற்கு முன்பு இருந்த குடியரசுத் தலைவர்களால் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது.

இரண்டாவது முறை குடியரசு தலைவரிடம் போய் இருக்கு. இப்போ நீட் வேண்டாம் என்று சொன்னீர்கள் என்றால் ?  அரசியலமைப்புச் சட்டம் தெரிந்த யாராக இருந்தாலும் சொல்லுவாங்க. இது அண்டின்க் கான்ஸ்டியூசனல் என்று சுப்ரீம் கோர்ட்டுக்கு போகணும். கையெழுத்து வாங்கி என்ன பிரோயோஜனம் ? கையெழுத்து வாங்கி என்ன  நடக்கப்போகுது ? ஒரு ஆளும் கட்சி 50 லட்சம் கையெழுத்து வாங்க முடியாதா ? என கேள்வி எழுப்பினார்.