அதிமுகவின்  52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  தமிழகத்திற்கு புதிய திட்டங்களை மத்தியிலே பெறுவதற்கும், தமிழகத்திற்கு திட்டங்களுக்கு தேவையான நிதிகளை மத்தியிலே பெறுவதற்கும்,

தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும்,  இதுவே எங்கள் கழகத்தின் ”தேர்தல் முழக்கம்”. ஸ்டாலின் அவர்களே..  உங்களைப்போல் மத்தியிலே ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்று அண்ணா திமுக நினைக்கவில்லை.

தமிழ்நாட்டு மக்கள்தான் எஜமானர்கள். தமிழ்நாட்டு மக்கள் தான் வாக்களிக்கின்றார்கள். வாக்களிக்கின்ற மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். வாக்களிக்கின்ற மக்களினுடைய குரல் நாடாளுமன்றத்திலே ஒலிக்கப்பட வேண்டும். அதுதான் அண்ணா திமுகவினுடைய லட்சியம். ஆகவே யாருக்கும் அண்ணா திமுக அஞ்சியது கிடையாது, அஞ்சப் போவதுமில்லை.

திரு.ஸ்டாலின் அவர்களே பாண்டிச்சேரி உட்பட தமிழகத்திலே 40 நாடாளுமன்றம் இருக்கிறது. 40 இடங்களிலும் அண்ணா திமுக வெல்லும், வெல்லும். மீண்டும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்.2026லே அண்ணா திமுக ஆட்சிக்கு வரும். 2024இல் அதற்கு அச்சாணி அமைப்போம்,  அமைப்போம் என்று இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.