செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் நல்லா இருக்கிறார்கள். முக்கியமான தருணங்களில் நிச்சயமாக வருவார். செயற்குழு பொதுக் குழு,  மாநாடு இந்த மாதிரி நிகழ்ச்சி நடைபெறும் பொது  நிச்சயமாக நீங்கள் கேப்டனை பார்க்கலாம். பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதம் காலம் இருக்கிறது. அதனால் ஜனவரியில் எங்கள் கட்சியினுடைய செயற்குழு –  பொதுக்குழு நடத்த இருக்கின்றோம்.

அது முடித்த பிறகு யாருடன் கூட்டணி ? எந்த தொகுதி ? யார் வேட்பாளர் என்பதை கேப்டன் அவர்கள் உங்களுக்கு அதிகார பூர்வமாக அறிவிப்பார்கள். ஆந்திராவில் ரயில் விபத்தில் நடந்திருக்கிறது. 19 உயிரிழந்திருக்கிறோம். அவர்களுக்கு நாம்  இந்த நேரத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக அஞ்சலியை அவர்களுக்கு செலுத்துகிறோம்.

ஏனென்றால் இந்த அளவிற்கு ஒரு கவனக்குறைவு வரவர  ரயில்  பயணம்  என்பது மரண பயணமாக ஆகிவிட்டது. ரயிலில் போனால் தான் சேப்டி என நினைச்சாங்க. இப்ப எந்த சேப்டியும் இல்லை. சிக்னல் கிடைக்கவில்லை, சிக்னல் வீக் என்று சொல்லுகிறார்கள். இதையெல்லாம் ரயில்வே துறை கவனித்து,  மக்களை காப்பாற்ற வேண்டியது மத்திய – மாநில அரசின்  கடமை என்று சொல்லி நான் கேட்டுக்கொள்கிறேன்.

இறந்தவர்களுக்கு வெறும் காசு கொடுப்பதனால் என்ன நடக்கப்போகிறது ?  அதனால் இனிமேல் ரயில் விபத்துக்கள் எங்கேயும் நடக்க கூடாது. அதே போல் கேரளாவில் குண்டுவெடிப்பு சம்பவம் எல்லோரையும் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு உண்டாக்கியிருக்கிறது. கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்களே… கிறிஸ்தவ தேவாலயத்தில் அவர்கள் குண்டு வெடிப்பு நடத்தி இருக்கிறார்கள்.

அவரே சொல்லுகிறார் ? அவர்களுடைய போதனைகளும்,  குழந்தைகளை வழி நடத்துவதும்,  அதேபோல தேசிய கீதம் பாட கூடாது என்கின்ற விதிகளை எல்லாம் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் தான் குண்டு வைத்தோம் என்று சொல்லுறாங்க.  இது எந்த அளவிற்கு ஒரு மோசமான ஒரு நிலைமையை  காட்டுகிறது. இனிமேல் நம் அனைவரும் ஒரே இனம், ஒரே குலம் என்பதைப் போல…..  ஒற்றுமையோடு வாழ்ந்து, நிச்சயமாக நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.