
தேவையில்லாம என்ன பண்ணுவாங்கன்னா… நியாயமா தெளிவு பெற வேண்டும், ஐயம் இருக்குது என்றால்…. என்னை கூப்பிட்டு விசாரித்தால் உங்க கிட்ட கேட்க வேண்டிய கேள்வி, இவர்கிட்ட கேட்க வேண்டிய கேள்வி, அவரிடம் கேட்க வேண்டிய கேள்வி எல்லா கேள்விக்கும் என்கிட்ட தான் பதில் இருக்குது. என்கிட்ட கேட்டு தெளிவு பெற்றுவிட்டு போகலாம். சும்மா தேவையில்லாம அஞ்சு மணிக்கு எல்லாம் போய்…..
திருச்சில துரை வீட்டுக்கு எல்லாம் போயி, மாதரசி ரெண்டு பிள்ளையை வைத்துக்கொண்டு இருக்கிறது. அவர் வெளியில வந்துட்டாரு… அதே மாதிரி தென்னகமெல்லாம் சிற்றூரில் இருக்கிற ஒரு பையன்…. கார்த்திக்கு கட்சி அலுவலகத்திலேயே படுத்திருக்கிறதுனால, நீங்க அங்க போகல. 5ஆமாம் தேதி வா என அவனுக்கு அழைப்பானை அனுப்பி வீட்டீர்கள்…
நானே 5ஆம் தேதி போகலாம்னு இருக்கேன். தனித்தனியா விசாரிக்கிறீங்க… என்னையும் சேர்த்து விசாரிச்சிருங்க…. ஏன்னா இது எல்லாத்துக்கும் பொறுப்பு நான் தான். அவன் என்கிட்ட தான் கேட்டுட்டு பதில் சொல்லுவான். அண்ணே இதுக்கு என்ன அண்ணே பதில் சொல்லணும்ன்னு… எனவே நானே சொல்லிடுறேன்…. அதனால அது அவசியமில்லை… அந்த மாதிரி அச்சுறுத்தலுக்கும் அஞ்சுற ஆளுகளும் இல்லை. சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டிருந்தால், நீங்கள் நடவடிக்கை எடுங்க என தெரிவித்தார்.