செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், இந்திய ஜனநாயக புலிகள் இயக்கத்தின் சார்பாக தேசிய அளவில் தமிழகத்தில்  ஆரம்பிக்கிற இந்த இயக்கத்திற்கு ஆதரவாக வந்திருக்கும் தாலிகையாளர்கள் அனைவருக்கும் பணிவான வணக்கங்கள்…  இது தமிழ் தேசிய புலிகள் என ஆரம்பிக்கப்பட்டது. கால அவகாசங்கள், கால ஓட்டத்தில் இன்றைய அரசியல் சூழலின் காரணமாக இந்திய அளவிற்கு இதை எடுத்துச் செல்கிறோம்.

அதிரடி அரசியல்,  தடாலடி பதவிகள்,  அனைவருக்கும் ஆன ஆட்சி,  அனைவருக்கும் ஆன அரசியல்,  ஏழைகளின் இந்திரலோகம்,  அதுதான் DDI.  இது ஏதோ ஏனைய கட்சிகளைப் போல் இருக்காது. எனது வாழ்நாளில் இறுதி மூச்சு உள்ளவரை,  இதற்காக அரும்பாடு படுவேன்...  அறியப்பெறிய எளியவர்களை அரசியலில்,  ஆட்சியில் அமர வைப்போம்.  அதுதான் எங்கள் தாரக மந்திரம் என தெரிவித்தார்.

பிறகு அவருடன் இருந்த வழக்கறிஞர்  பேசும் போது,  அனைத்து மக்களும் கல்வியும்,  அரசியலில் பங்கு எடுக்க வேண்டும் என்பதற்காகவே நம் தலைவர் இந்த கட்சியை ஆரம்பித்திருக்கின்றார். அரசியல் தெரிந்தால் மட்டுமே அதிகாரம் ஏழைகள் கையில் கிடைக்கும் என்ற உன்னதமான நோக்கத்துடன் கல்வியும்,  அரசியலும் இரண்டு கண்கள் என்ற தத்துவத்தை இந்தியா முழுவதும் கொண்டு செல்வதற்காகவே இந்த கட்சியை ஆரம்பித்திருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என பேசினார்.