டி20 உலகக்கோப்பை 2026 அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீரை முன்னாள் இந்திய வீரர் நவ்ஜோத் சிங் சித்து கடுமையாகச் சாடியுள்ளார்.
இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெறாது என்றும், அப்படியே வந்தாலும் இங்கிலாந்திடம் தோற்றுவிடும் என்றும் அமீர் தொடர்ந்து கணித்து வந்தார்.
ஆனால், இந்தியா 253 ரன்கள் குவித்து இங்கிலாந்தை வீழ்த்தி பதிலடி கொடுத்தது. இதனால் ஆத்திரமடைந்த சித்து, “முகமது அமீர் ஒரு போலி பாபா” என்று வர்ணித்துள்ளார்.
“He is a fake baba! He has become a habit of giving wrong predictions!”… Former player who criticized India.. slammed Navjot Singh..!!!
“சிலருக்குத் தவறான கணிப்புகளைச் சொல்லியே பழக்கமாகிவிட்டது. அவர்களின் கணிப்பு பலித்தால் தங்களை அறிவாளி என்பார்கள், பொய்த்தால் அது வெறும் யூகம் என்பார்கள்.
ஆட்டம் மைதானத்தில்தான் தீர்மானிக்கப்படுமே தவிர, இவரைப் போன்றவர்களின் வாயில் இல்லை” என்று சித்து தனது வீடியோவில் விளாசியுள்ளார்.
