டி20 உலகக்கோப்பை 2026 அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரை பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இந்த முக்கியப் போட்டியில் சஞ்சு சாம்சன் 89 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்குக் காரணமாக இருந்ததைச் சுட்டிக்காட்டிய அக்தர், சஞ்சு இன்று ஒரு சூப்பர் ஸ்டாராக ஜொலிப்பதற்கு கம்பீரின் பிடிவாதமே காரணம் என்று கூறியுள்ளார்.

சஞ்சு சாம்சனை அணியில் சேர்ப்பதற்காகப் பல விமர்சனங்களை எதிர்கொண்டு கம்பீர் போராடியதாகவும், ஒரு வீரர் மீது நம்பிக்கை வந்துவிட்டால் அவரை அணியில் சேர்க்க கம்பீர் எந்த எல்லைக்கும் செல்வார் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தத் தொடரில் சஞ்சு சாம்சன் 4 இன்னிங்ஸ்களில் 232 ரன்கள் குவித்து அமர்க்களப்படுத்தி வரும் நிலையில், “கம்பீர் ஒரு மாஸ்டர்மைண்ட்” என கிரிக்கெட் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.