சமூக வலைதளங்களில் தினமும் எத்தனையோ விலங்குகளின் வீடியோக்கள் வைரலானாலும், தற்போது வைரலாகி வரும் ஒரு குரங்கின் வீடியோ நெட்டிசன்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது. ஒரு பெரிய குரங்கு திடீரென ஒரு நகைக்கடைக்குள் புகுந்தது.
அங்கிருந்த விநாயகர் படத்தின் மீது அமர்ந்து கொண்டு, அக்கம்பக்கத்தை நோட்டமிட்ட அந்த குரங்கு, பிறகு அங்கிருந்த சிசிடிவி திரையை மிக அருகே சென்று ஏதோ இன்ஸ்பெக்டர் போல சோதனையிட்டது. இதைப் பார்த்த ஊழியர்கள் மிரண்டு போவதற்குப் பதில், அந்த குரங்கு என்ன செய்கிறது என்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.
View this post on Instagram
கடையில் வைக்கப்பட்டிருந்த பூங்கொத்தில் இருந்த பூக்களை அந்த குரங்கு சாப்பிடத் தொடங்கியது. ஊழியர் ஒருவர் அந்தப் பூங்கொத்தை எடுக்க முயன்றபோது, குரங்கு கோபமடைந்து அவரிடமிருந்து அதைத் திரும்பப் பிடுங்கியது. பசியில் இருக்கும் என நினைத்து ஊழியர்கள் வாழைப்பழம் கொடுத்தபோது, அதைத் தட்டிவிட்ட அந்த ‘கெத்தான’ குரங்கு, நேராகக் கடையின் சாமி அறையில் இருந்த இனிப்புகளை எடுத்து மிக நிதானமாகச் சாப்பிடத் தொடங்கியது.
‘sanjaydey2000’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “பஜரங்கபலியே நேரில் வந்துவிட்டார்” என்றும், “கடை கணக்கைச் சரிபார்க்க வந்த ஆடிட்டர் போலத் தெரிகிறது” என்றும் கிண்டலாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.
