திருவள்ளூர் மாவட்டம், கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்த மோகித் (வயது 12) என்ற மாணவர், இன்று (16.12.2025) மதிய உணவு இடைவேளையின்போது பள்ளி வளாகத்தில் இருந்த நடைமேடையை ஒட்டியிருந்தப் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தத் துயரகரமான செய்தியைக் கேட்டுத் ‘தான் மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்ததாக’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், மோகித்தின் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று இலட்சம் ரூபாய் வழங்கிட உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
