விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளராகப் பணியாற்றி வந்த கே. கணேஷ்பாண்டி தலைமையில், 200-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் நேற்று (டி.16) சிவகாசியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அதிமுக) இணைந்தனர்.
சிவகாசியில் உள்ள தனியார் மகால் ஒன்றில் நடைபெற்ற இந்த இணைப்பு விழாவில், கழகத்தின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு, மாற்றுக்கட்சியில் இருந்து இணைந்தவர்களை வரவேற்றார். திமுக-வின் பொறுப்பு வகித்த கே. கணேஷ்பாண்டி மற்றும் அவருடன் சிவகாசி நேரு காலனி, விவேகானந்தர் காலனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பிற கட்சியினர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இதன் மூலம், இப்பகுதியில் அதிமுக மேலும் பலமடைந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
