தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, நடிகர் விஜய்யை அரசியலில் பேசுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “அரசியலில் அடியெடுத்து வைத்த பிறகு விஜய் அமைதியாக இருக்கக் கூடாது. பேச வேண்டிய விஷயங்களில் அவர் கண்டிப்பாகப் பேச வேண்டும்” என்று கூறினார். குறிப்பாக, சமீபத்தில் நடந்த திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விஜய் ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

“நான் பேச மாட்டேன், வேடிக்கை மட்டுமே பார்ப்பேன் என்று இருந்தால், மக்கள் எப்படி உங்களை நம்பி ஆட்சிப் பொறுப்பைத் தருவார்கள்?” என்றும் அவர் கேட்டார். மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பேச்சு குறித்து, “தோல்வியைப் பற்றி பாஜகவுக்கு மு.க. ஸ்டாலின் பாடம் எடுக்க வேண்டாம்” என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.