கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக வாக்காளர்களுக்கு அலைபேசி மூலம் அழைத்து தனக்கு வாக்களிக்குமாறு கேட்டு G Pay மூலம் பணம் அனுப்பி வருவதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் திமுக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.

அவினாசி சாலையில் உள்ள பாஜக தேர்தல் அலுவலகத்தில் இருந்து வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் மூலம் இச்செயல் நடைபெறுவதாக கோவை வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தெரிவித்துள்ளது