கடலூர் மாவட்டத்தில் உள்ள பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கருப்பு பட்டைய அணிந்து தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியருக்கு சிறப்பு ஊதியம் 6750 ரூபாயும் அகவிலைப்படி உடன் கொடுக்க வேண்டும்.

காலை சிற்றுண்டி திட்ட அமலாக்கத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு அமைப்பின் மாநில செயலர் கே.குணா தலைமை தாங்கியுள்ளார். இதில் நிர்வாகிகள் ராஜேந்திரன், பரமசிவம், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர்.