விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலை நகரில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிருந்தாவதி என்ற மனைவி உள்ளார். இவர் கல்வராயன் மலை உண்டு உறைவிட பள்ளியில் தங்கி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஊருக்கு வந்த போது வீட்டில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு பிருந்தாவதி அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை, 60 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பிரத்தாவதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.