அட்டைப்பெட்டியில் குழந்தையை வைத்து கொடுத்த இந்த அரசு இனியும் ஆட்சியில் இருக்க என்ன அருகதை இருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த நபரின் மனைவி இரண்டாவதாக முறையாக கருவுற்றிருந்த நிலையில் இவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி இருந்ததால் மருத்துவமனைக்கு  கொண்டு செல்ல முடியவில்லை. அதனால் அவருக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்து இருக்கிறது. இதனை தொடர்ந்து மனைவியையும் பிறந்த குழந்தையையும் மீன் வண்டியில் வைத்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக கூறிய அவர்கள் பிணவறைக்கு குழந்தையின் உடலை அனுப்பியுள்ளனர்.

இந்த சூழலில் குழந்தை உடலை முறையாக துணி வைத்து மூடாமல் ஒரு அட்டைப்பெட்டியில் ஏதோ ஒரு பொருளை வைத்துக் கொடுப்பது போல கொடுத்ததாக கூறப்படுகிறது .இந்த புகைப்படம் வெளியாகி தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட ஊழியர்களை அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது .இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் ,ஒரு பச்சை குழந்தை உடலை அட்டை பட்டியல் வைத்துக் கொடுத்திருக்காங்க. கேட்டால் அதிகாரிகள் மீது ஆக்சன் எடுத்துட்டாங்களாம்.

சஸ்பெண்ட் செஞ்சுட்டாங்களாம். அந்த உயிருக்கு யாரு பதில் சொல்லுவா? ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிருக்காங்க. ஏதோ மருந்து வைத்த அட்டை பெட்டில் வைத்து குழந்தையின் சடலத்தை அனுப்பி இருக்காங்க. இதுதான் முறையா இதே ஒரு பணக்காரர் குழந்தையாக இருந்தால் இப்படி செய்திருப்பார்களா? நம்ம பிள்ளையை இப்படி அட்டைப் பட்டியில் வைத்து கொடுத்தால் நாம சும்மா விட்ருவோமா? தங்கப்பட்டியில் வைத்து கொடுக்க சொல்றோம். ஒரு துணியில் மடிச்சு வச்சு மரியாதை கொடுக்கத் தெரியாதா ?இதுக்கு என்ன அர்த்தம் என்று கொந்தளித்துள்ளார்.