சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் தெரு தெருவாக இறங்கி வேலை செய்து வருவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் வெள்ளம வடிந்தாலும் எலி காய்ச்சல், தோல் நோய்கள், சுவாச நோய்கள் போன்றவை பரவக்கூடும் என்றும் எச்சரிக்கை கொடுத்துள்ளார். பல இடங்களில் மழை வெள்ளம் மூழ்கடித்து சென்றது. இருந்தபோதிலும் அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக சில தினங்களில் மழை வெள்ளம் வடிந்தது. ஒரு சில இடங்களில் இன்னும் நீர் வடியவில்லை. இதன் காரணமாக அந்த வெள்ள நீர் அனைத்தும் சாக்கடையாக மாறி பெருந் துர்நாற்றத்தோடு தேங்கி நிற்கிறது.

இதனால் பொதுமக்களுடைய இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மழை நீர் எங்கெல்லாம் வடிந்து விட்டதோ அங்கெல்லாம் பணி முடிந்து விட்டது என்று திரும்ப வராமல் அங்கு பொது சுகாதார நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் ஈடுபட்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் பல இடங்களில் காலி மனைகளில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. சாக்கடை நீரும் வருகிறது.

இப்படி தண்ணீர் தேங்குவதா எல்லோரும் இப்போது டெங்கு காய்ச்சல் மட்டும் தான் வரும் என்று நினைக்கிறார்கள். அப்படி கிடையாது தோல் நோய் பூஞ்சை சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் தண்ணீரால் ஏற்படும் நோய்கள் பரவக்கூடும். மேலும் தேங்கி தண்ணீரில் இறங்கி நடந்தால் எலி காய்ச்சலும் வரும். இதனால் மாநகராட்சி சார்பில் இதற்கான தடுப்பு மாத்திரைகளும் மருந்துகளும் வழங்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கிறோம் எல்லா இடங்களிலும் இந்த மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.