கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டம், பொயிலூர் என்ற கிராமத்தில் உள்ள ஒரு சாதாரண டீக்கடை, அதன் தனித்துவமானப் பணமில்லாப் பண்டமாற்று முறை காரணமாகச் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

ஶ்ரீதரேட்டன் நடத்தி வரும் இந்த 75 வருடப் பழமையானக் கடையில், வாடிக்கையாளர்கள் பணத்திற்குக் பதிலாகத் தேங்காய்களைக் கொடுத்து உணவைப் பெற்றுக் கொள்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Shramona Poddar (@mishti.and.meat)

“Food for 2 coconuts!”… Unique barter system at a tea shop… Bizarre video goes viral…!!

இந்த பண்டமாற்று முறை நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது. முதலில், வயல்களில் உழைக்கும் விவசாயத் தொழிலாளர்கள் தங்கள் உணவுக்குப் பகரமாகத் தற்செயலாகக் கீழே விழுந்தத் தேங்காய்களைக் கொண்டு வருவார்கள்.

தற்போது, இம்முறை அனைவரும் பயன்படுத்தும் வகையில் உள்ளது. உதாரணமாக, இரண்டு தேங்காய்களைக் கொடுத்தால், ஒரு பரோட்டா, புழுக்கு (மரவள்ளிக்கிழங்கு கறி) மற்றும் ஒரு தேநீர் கிடைக்கும்.

இப்போது பணமும் வாங்கப்பட்டாலும், இந்தத் தனித்துவமான முறை தொடர்கிறது. கடைக்காரர் சேகரிக்கும் தேங்காய்களைக் காயவைத்து ‘கொப்பரைத் தேங்காயாக’ மாற்றி விற்பனை செய்கிறார். இந்தக் கடையின் எளியச் செயல் பல நெட்டிசன்களைக் கவர்ந்துள்ளது.