தமிழக அரசின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ராதாகிருஷ்ணன், சுகன்தீப் சிங் பேடி, தீரஜ் குமார் மற்றும் அமுதா ஆகியோரை தமிழ்நாடு அரசின் செய்தி தொடர்பாளர்களாக முதல்வர் ஸ்டாலின் நியமித்துள்ள நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது தமிழ்நாடு அரசு துறையின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இடங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கவும் பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழக அரசின் செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும் தமிழ்நாடு அரசின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
