திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள படலையார் குளம் கீழத்தெருவில் விவசாயியான கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் இவரது அண்ணன் நம்பிராஜனுக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனால் கோபமடைந்த நம்பிராஜன் உள்பட இரண்டு பேர் கண்ணனை கம்பால் தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த கண்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.