சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழ கோட்டை கிராமத்தில் இருக்கும் முத்துமாரியம்மன் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து. கடந்த 60 ஆண்டுகளாக இந்த பகுதியில் இருக்கும் மண் சாலையால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் ஆண்டுதோறும் காலை சேரும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. கடந்த 3 நாட்களாக அந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்தால் முத்து மாரியம்மன் கோவில் தெரு முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதனால் பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.

வாகனத்தில் செல்பவர்கள் நிலைதடுமாறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. நோய் தொற்று பரவும் அபாயமும் இருக்கிறது. இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கிராம மக்கள் புதிய தார் சாலை அமைக்க வலியுறுத்தி சேறும், சகதியுமாக இருக்கும் சாலையில் நாற்று நட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.