தங்கள் திட்டங்களால் பயனடைந்த வாக்காளர்களின் தனிப்பட்ட தரவுகளை அரசியல் கட்சிகள் தேடுவது ஊழலுக்கு சமம் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. செயலி, விளம்பரங்கள் மற்றும் கணக்கெடுப்புகள் மூலம் தரவுகளை சேகரித்தால் அதனை உடனே நிறுத்திக் கொள்ளுமாறு தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வாக்காளர்களை குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க தூண்டுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.