ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட மோதலில், நான்கு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனந்தபூர் லக்ஷ்யம் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது மனைவி மகேஸ்வரி ஆகியோருக்கு இடையே குடும்பத் தகராறு காரணமாகக் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தகராறு உச்சகட்டத்தை எட்டியபோது, ஆத்திரமடைந்த ரமேஷ் தனது மனைவியைக் கொல்வதற்காக அவர் மீது கல்லை வீசியுள்ளார். ஆனால், அந்தக் கல் குறிதவறி அருகில் இருந்த அவர்களின் நான்கு வயது மகனின் தலையில் பலமாகத் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த குழந்தையை உறவினர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், பலனின்றி அந்தச் சிறுவன் உயிரிழந்தான். தம்பதியினரின் தனிப்பட்ட சண்டையினால் பிஞ்சு உயிர் பறிபோன இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
