கர்நாடக தேர்தல் முன்னிலை முடிவு விவரங்கள் காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.ஒவ்வொரு சுற்றிலும் வாக்கு எண்ணிக்கையும் முடித்த பின் அதிகாரிகள் அளிக்கும் அதிகாரப்பூர்வ முடிவு தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது.

அதன்படி தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின் படி காங்கிரஸ் 100 இடங்களிலும், பாஜக 68 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. அதேபோல மதசார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களிலும், பிற கட்சிகள் 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.