புது வட்டி விகிதங்களை பாங்க் ஆஃப் பரோடாவானது நேற்று (மே 12) முதல் அமல்படுத்தியுள்ளது. பாங்க் ஆஃப் பரோடா தன் வாடிக்கையாளர்களுக்கு 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரையிலான நிலையான வைப்புத் தொகை திட்டங்களில் பணத்தை முதலீடு செய்வதன் பாயிலாக பணத்தை சேமிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

வங்கியின் படி இந்த நிலையான வைப்புத் தொகை திட்டங்களில் ரூ.2 கோடி வரை முதலீடு செய்யலாம். வட்டி விகிதங்களில் மாற்றத்துக்கு பின் பொதுமக்களுக்கான நிலையான வைப்புத் தொகை திட்டத்தின் வட்டி விகிதம் 7.25 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே நேரம் மூத்த குடிமக்களுக்குரிய வட்டி 7.75 சதவீதமா கஅதிகரித்தது.