டெல்லியில் இருந்து லண்டனுக்கு கடந்த 10-ம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று சென்றது. இந்த விமானத்தில் பயணம் செய்த ஜஸ்கிரத் சிங் பட்டா (25) என்ற வாலிபர் விமானத்தில் எமர்ஜென்சி கதவை திறக்க முயற்சி செய்தார். அப்போது அந்த வாலிபரை விமான பணிப்பெண் தடுத்து நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் அந்த பணி பெண்ணை ஆபாசமான வார்த்தைகளால் திட்டினார். இதனையடுத்து மற்று ஊழியர்கள் அங்கு வந்து அந்த வாலிபரை கட்டுப்படுத்தினர்.
இந்த சம்பவம் குறித்து டெல்லி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் ஏர் இந்தியா நிறுவனமும் அது குறித்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் தகராறில் ஈடுபட்ட வாலிபர் 2 வருடங்களுக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்யக்கூடாது என தற்போது நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் விமானத்தில் வன்முறை செயல்களில் ஈடுபட்ட குற்றசாட்டிற்காக ஜஸ்கிரத் சிங் பட்டாவுக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய 2 வருடங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.