கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பான்மை பெற 113 இடங்கள் தேவை என்ற நிலையில், 115-க்கும் அதிகமான இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சி 73 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது…

இதனிடையே பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும் வேலைகளில் காங்கிரஸ் கட்சி இறங்கி உள்ளது. முன்னணி வெற்றி வரும் வேட்பாளர்கள் அனைவரும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பெங்களூருக்கு வர காங்கிரஸ் தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஹெலிகாப்டர்களில் எம்எல்ஏக்களை அழைத்து வருவதற்கு தயாராக 12 ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளன.