கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்பங்குப்பத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் முருகன் டிப்பர் லாரியில் மணல் லோடு ஏற்றிக்கொண்டு சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வண்டிகேட் சந்திப்பில் உள்ள வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி சாலையின் நடுவில் இருந்த தடுப்புக்கட்டையில் மோதி கவிழ்ந்து விட்டது.

இந்த விபத்தில் காயமடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிரேன் மூலம் லாரி அப்புறப்படுத்தினர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.