
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும், மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனரும், பொதுச் செயலாளருமான சரத்குமார் கலந்து கொண்டார். இதில் பேசிய அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும், மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர்,
நிறையபேருக்கு தெரியல… நம்மள ஊடகம் காட்டாமல் இருக்கலாம்.நம்ம கிட்ட நிறைய பஞ்சாயத்து தலைவர் இருக்காங்…. நிறைய கவுன்சிலர் இருக்காங்க…. யூனியன் கவுன்சிலர் இருக்காங்க…. நகராட்சி கவுன்சிலர் இருக்காங்க….. பேரூராட்சி கவுன்சிலர் எல்லாம் இருக்காங்க… இல்லன்னு நினைச்சிடாதீங்க.. இல்லாத சிலர் வேணும்ன்னா
பெருமையா பேசலாம்…. ஆனால் நாம் நின்னாலும் வெற்றி பெற்று தான் இருக்கின்றோம்… பல்லாயிரம் வாக்கு வாங்கிட்டு தான் இருக்கிறோம்… அதனால் நீங்க சாதாரணமா எடை போட்டுறாதீங்க… இருப்ப தக்க வைப்பதற்கான இடத்தில் நாம் முயற்சி பண்ணணும்…. ஆனாலும் மழை நமக்கு ஒத்துழைப்பு கொடுத்துருக்கு….. ஒத்துழைப்பு இல்லாமல் இருந்ததுருக்கு என எடுத்துக்கிட்டு, சிறப்பான பயணத்தை தொடருவோம்.. அடுத்த கூட்டம் ஜனவரி மாதம் ஏழாம் தேதி கும்பகோணத்தில் நடைபெறுகிறது. அந்த சமத்துவ விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.
ஒருவேளை மழை வந்துருச்சு…. மழையா இருக்கு…. பிளைட் பறக்குமா ? பறக்காதா ? பிளைட் வந்துருமா? வராதா ? சென்னையில் கிளம்பிருமா ? கிளம்பாதா ? அப்படின்னு நாலு நாள் பாதி மனநல…. பாதி இப்படி, பாதி அப்படி… இந்த இடமே உறுதி ஆகல. எங்க கூட இருந்த நிர்வாகிகள் சொல்லுவாங்க…. வாய்ப்பே இல்லை….. கூட்டம் நடக்காது போல என சொல்லுறது என் காதுபடவே கேட்கும் ஆனால் நான் மட்டும் நடக்கும்னு 100% நம்பினேன்…. நடக்கும்… நான் வருவேன்… என தலைவர் சொன்னபடி நடந்துச்சு. தலைவரும் வந்தார் என பேசி முடித்தார்.