செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், யாருடைய மனதையும் புண்படக்கூடாது. நானே இங்கு வந்து பேசுகிறேன் என்றால், ரொம்ப கவனமாக பேசுவேன்.  வார்த்தைகள் ரொம்ப நிதானமாகவும்…. அளந்தும்… சமுதாயத்தையோ…. சமூகத்தையோ….. தனிநபரையோ….  பெரிய அளவிற்கு தாக்கும் அளவிற்கு இருக்கக் கூடாது.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருத்தவரை எல்லோருக்கும் தெரியும். 2024ல் நாங்கள்தான் ஜெயிக்க போறோம்.

2026 இல் மீண்டும் புரட்சித்தலைவர் ஆட்சி, புரட்சித்தலைவி அம்மா ஆட்சி  எடப்பாடி தலைமையில் மறுபடியும் வரும். அப்போ  இயற்கையாக மக்களுடைய எண்ணங்களை பிரதிபலிப்பது….  மக்களுக்காக இயக்கம் நடத்துவது….  மிகப்பெரிய இயக்கம் என்ற அடிப்படையில் எல்லோரும் வந்து சேர்கிறார்கள்…..   பிஜேபி மட்டும் விலக்கா ? பிஜேபில் இருந்து வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்…..

எங்கு மக்கள் செல்வாக்கு உள்ள இயக்கம் இருக்கிறதோ…..  அங்குதான் பொதுவாக சேருவார்கள்…..  அந்த வகையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை…. என்னைக்கும் மக்கள் செல்வாக்கு உள்ள இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இயக்கம் தான். அதனால் எல்லாரும் ADMK வந்துட்டு இருக்காங்க.  பிஜேபி யில் இருந்து இன்னும் நிறைய பேர்  கண்டிப்பா வருவாங்க . வருகின்றவர்களை  எல்லாம் அரவணைப்போடு… உரிய மரியாதை கொடுப்போம் என தெரிவித்தார்.