அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின்  நிறுவனரும்,  பொதுச் செயலாளருமான சரத்குமார் கலந்து கொண்டார். இதில் பேசிய கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தின் செயலாளர் அரசன் பொன்ராஜ்,

இன்னைக்கு பிறந்த குழந்தைக்கு கூட நாம இவ்வளவு பெரிய கடனை சுமத்தி வைத்திருக்கின்றோம். பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் ஆட்சிக் காலத்தில்…. அப்போது இருந்த மந்திரிகள் எல்லாம் சொன்னாங்க….  கடன் தொல்லை எல்லாம் இல்லை….  நமக்கு எல்லா குடும்பத்திலும் கஷ்டப்படுறாங்க…..  கொஞ்சம் பணம் கொடுத்து உதவலாம் என சொல்லுறாங்க… திரும்ப  பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்,  உடனே என்ன சொன்னார்கள் ? என்றால் ,

ஓஹோ செஞ்சிடலாம் எல்லாருக்கும் இலவசம் கொடுத்திடலாம்…..  இலவசமாக எல்லாத்துக்கும் ரூபாய்  கொடுத்துவிடலாம்…  ஆனால் ரிசர்வ் பேங்க்ல கொஞ்சம் நோட் அடிச்சு எல்லாருக்கும் இலவசமாக கொடுத்துடலாம். ஆனால் 6 மாசத்துல உனக்கு சாப்பிட உணவு  இருக்காதுன்னு சொன்னாரு….  அதைத்தான் நம்ம தலைவர் அவர்கள் அடிக்கடி சொல்லுவாங்க…  தங்க கட்டி இருக்கும்……  உண்ண  உணவு இருக்காதுன்னு சொல்வார்கள் ….

பெருந்தலைவர் காமராஜர் என்ன வழியில் இருக்கின்றாரோ,  அதே வழியை  நம்முடைய தலைவரும் கடைபிடித்துக் கொண்டிருக்கிறார். இன்னைக்கு நாம் உண்ணுகின்ற உணவு தானியங்களில் 30 சதவீதம் அண்டை நாடுகளில் இருந்து வாங்கி வருகின்றோம்.   வாங்குறோம்… நீர்நிலைகளை சரி படுத்துவது இல்லை…. நம்முடைய அரசாங்கம் நீர்நிலைகளை சரிபடுத்தி,  விவசாயிகளை ஊக்கப்படுத்துவதில்லை. தலைவர் அவர்கள் சொல்வார்கள் அடிக்கடி,  வீட்டுக்கு ஒரு விவசாயியை உருவாக்க வேண்டும்.  வீட்டுக்கு ஒரு விவசாயியை உருவாக்க வேண்டும் என்று சொன்னால், நீர் நிலைகளையும் உருவாக்க வேண்டும்….

இன்றைக்கு நீர் நிலைகள் எல்லாம் எப்படி இருக்கு ? நம்ம ஊரில் ஓடக்கூடிய  தாமிரபரணி ஆற்றை பார்த்தோம்னா…. கேவலம்…. அங்கு  பார்த்தீங்கன்னா சாக்கடையும்,  எல்லா ஆலைகளில்  கழிவுகளும் அங்கே இருக்கு.ஒரு காலத்துல பார்த்தோம்னு சொன்னா….   தாமிரபரணியில் மூங்கி  எந்திரிச்சா எல்லா நோயும் போய்டும் என சொல்லுவாங்க… ஆனால்  இன்னைக்கு என்ன சொல்றாங்க ? எல்லா நோயும் வந்துரும்….

ஏன்னா எல்லா ஆளைக் கழிவுகளும் உள்ளே வந்து சேர்ந்ததுன்னு சொல்றாங்க…பெருந்தலைவர் காமராஜர் இந்த தமிழகத்தை ஒன்பது ஆண்டுகாலம் ஆட்சி செய்தார்கள். அவருடைய ஆட்சியிலே கக்கன் போன்றவர்கள் எல்லாம் அமைச்சர்களாக இருந்தார்கள். நாட்டு நலனுக்காக பல செயல் திட்டங்களை…. பொற்கால ஆட்சியாக தந்திருக்கிறார் காமராஜர் அவர்கள்….  ஆனாலும் கூட அவருடைய வாழ்க்கையில் என்ன சம்பாதித்து வைத்திருந்தார்கள் என்று சொன்னால்,  அவருடைய தாயார் இறந்ததற்கு கூட அந்த வெட்டியானுக்கு  கொடுக்க பணம்….

கூலி தொழிலாளிக்கு கொடுக்க பணம்  இல்லாமல் வெக்கி தலை குனிந்தார் அல்லவா   காமராஜர் ? ஆனால் இன்னைக்கு எப்படி ஆச்சி ஆள்றாங்க ?  ஐந்தாண்டுகளில் இல்ல….  பத்தாண்டுகள் இல்லை….  எத்தனை ஆண்டுகளாக ஆளுகிறார்கள் என்பது முக்கியமல்ல…. அத்தனையும் அந்த கட்சிக்கு பணம் சேர்க்க வேண்டும் என்று சொல்லி…. அங்கு இருக்கக்கூடிய அத்தனை அமைச்சர்களும் பார்த்தீர்கள் என்றால் ? வாழ்க்கை வரலாற்றை  எடுத்து பார்த்தோம் என்று சொன்னால் ? ஒருத்தன் சிறிய அளவுல ஸ்கூல் வச்சிருந்தாரு…… இன்னைக்கு பார்த்தோம்னா…. எல்லா நாடுகளிலும் அவருக்கு எல்லா நிலங்களும் இருக்கிறது. ஆயில் தொழிற்சாலைகள் இருக்கிறது…. கல்லூரிகள் இருக்கிறது….

இன்னைக்கு பார்த்தோம் என்று சொன்னால் ? பிராந்தி கம்பெனி எல்லாமே அவுங்ககிட்ட இருக்குது.பல ஆயிரக்கணக்கான கோடிக்கு சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள்….  இன்னைக்கு ஆளுகின்றவர்களுடைய  ஹிஸ்டரியை பார்த்தோம்னா…… நீங்க கூகுள்ல பாத்தீங்கன்னா…… அவருடைய ஹிஸ்டரி நமக்கு தெரிஞ்சிற போது… எ ப்படி வந்தார் ?  பிச்சைகாரனாக வந்தாங்க… இன்னைக்கு  எவ்ளோ பெரிய கோடிஸ்வரனாக இருக்கிறாங்க….  அப்ப அந்த ஆட்சியை எப்படி நடத்திட்டு இருக்காங்க ? இந்த நிலை மாற வேண்டும்….

நம்முடைய பணங்கள் எல்லாம் ஒரே இடத்தில் குவிகிறது …. அந்த நிலை மாற வேண்டும் என்று சொன்னால்,  நாம் என்ன செய்யணும் ? நமது சமத்துவ மக்கள் கட்சியை முன்னேற்ற வேண்டும்….  சமத்துவ மக்கள் கட்சியால் மட்டும்தான் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்க முடியும்….  நமது தலைவர் அவர்களால் தான் நல்லதொரு ஆட்சியை கொடுக்க முடியும் என்று சொல்லி,  இந்த அருமையான நேரத்திலே வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்,  நன்றி வணக்கம் என பேசி  முடித்தார்.