கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  மழை – வெள்ளம் வந்த பிறகு குடிதண்ணீர் பிரச்சனை… ஏற்கனவே சென்னையில் ஏற்பட்டது. அதையாவது இவர்கள் பார்த்திருக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு இன்றைய முதலமைச்சர் என்ன சொல்கிறார் ? இந்திய வானிலை ஆய்வு மையம் சரியாக எங்களுக்கு சொல்லவில்லை என்று சொல்கிறார். அவர்கள் எல்லாம் சரியாக தான் சொன்னாங்க…  உங்களுடைய அரசு செயலற்று இருக்கின்றது. அதனால மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் மக்கள் துன்பத்தில் வேதனையில் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற காட்சியை பார்க்கிறோம்.

அவர்கள் ஏற்கனவே மிக்ஜாம் புயல் வருகின்ற போது ஒரு வாரத்துக்கு முன்பு வானிலை ஆய்வு மையம் தெளிவுபடுத்தி விட்டது. ஒரு வாரத்துக்கு முன்பாகவே கனமழை பொழியும் என்று சொல்லிவிட்டார்கள். அப்பவும் நடவடிக்கை எடுக்கல….  இதனால் மக்கள் கடுமையாக பாதிச்சாங்க.  அதுக்கு பிறகாவது இந்த தென்மாவட்டத்தில்….

நாலு மாவட்டத்திலும்…. கனமழை பொழியும். அதீ கன மழை பொழியும் என்று சொன்னாங்க. அதீ  கன மழை என்றால்  21 செண்டி மீட்டருக்கு மேல பெய்யும் என  சொன்னாங்க. 14ஆம் தேதியே  இந்திய வானிலை மையம் சொல்லிட்டாங்க. உடனடியாக…. வேகமாக…. துரிதமாக செயல்பட்டு இருந்தால்….

இந்த உணவு பிரச்சனை எல்லாம் வந்திருக்கு.  குடிநீர் பிரச்சனை வந்திருக்காது…. பால் இல்லை  பிரச்சனை வந்திருக்காது….. படகுகளை வைத்து எங்கெங்கெல்லாம் தண்ணிகள் அதிகமாக தேங்கி  இருக்கிறதோ….  அங்கெல்லாம் மக்களை அழைத்து வந்து முகாம்ககளிலே  தங்க வைத்து இருக்கலாம். எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காத ஒரு அரசு இந்த விடியா திமுக அரசு என தெரிவித்தார்.