அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின்  நிறுவனரும்,  பொதுச் செயலாளருமான சரத்குமார் கலந்து கொண்டார். இதில் பேசிய கொள்கை பரப்பு துணைச் செயலாளர் சண்முகம் கணேசன்,

நெல்லையில் நிற்கப்போவது யார் ? நெல்லையை வென்றெடுக்க போவது யார் ? என்பதை தமிழகத்துக்கு உணர்த்தி காட்டுவதற்காகவே இந்த பொதுக்கூட்டத்தை எங்களது மாநில ஒருங்கிணைப்பாளர்,  அண்ணன் சுந்தர் அவர்கள் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்…. காரணம் இந்த இடம் முடிவு செய்யப்பட்டதே  இரண்டு நாளைக்கு முன்பாக தான்….

இப்படி இரண்டு நாள் நேரத்திலே இப்படி  சிறப்பான கூட்டத்தை ஏற்பாடு செய்து…  அதிலும் எங்களுடைய சூரியனைக் கொண்டு அமர வைத்து….  வருகின்ற காலத்தில் தமிழகத்தில் நாங்கள் தான். நாங்கள் முடிவு செய்தால்தான் இந்த ஆட்டை ஆள முடியும் என்ற   அச்சாரமாக இங்கே வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார் நமது புரட்சி திலகம் நாட்டாமை அவர்கள்… சமீபகமாக உலக கோப்பை கிரிக்கெட் நடந்தது. இந்தியா பைனல் வரை போய் தோத்தது… அதற்குள் நாங்களும் இவ்வளவு நாள் டெஸ்ட் விளையாடிட்டு இருந்தோம்..

அரசியலிலே சமத்துவ மக்கள் கட்சி ஒரு டெஸ்ட் மேட்ச் ஆடிட்டு இருந்தது. இப்போ ONE DAYல செமி பைனல் வரை வந்த நாம், அடுத்த ஆட போறது T20 தான். நாம தான் இந்த தமிழகத்தில் கால் பதிக்க போறோம் ….  234 தொகுதிகளிலும் சமத்துவ மக்கள் கட்சி சுட்டிக்காட்டுபவர்கள்தான் வெற்றி வேட்பாளராக வர முடியும் என்பதை சொல்லி…. யாரு முட்டையை தூக்கிட்டு வந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது…..  யாரு செங்கலை தூக்கிட்டு வந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது… ஏனென்றால் அவர்கள் எல்லாம் முட்டையிலும்  கொள்ளையடித்தவர்கள்….  செங்கலிலும் கொள்ளை அடித்தவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

காரணம் நாங்குநேரி தொழில்நுட்ப பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார் கலைஞர். இன்று வரை நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா வெளியே தெரியவில்லை. நீங்கள் எல்லாம் நாங்குநேரி தொகுதி மக்கள் பெரும் திரளாக வந்து இருக்கின்றீர்கள். உதயநிதி ஸ்டாலின் வரும்போது நீங்கள் செங்கலை தூக்கி காட்டணும்…  எங்கடா எங்க தொழில் நுட்ப பூங்கா என்று கூறி நல்லதொரு வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன் என பேசினார்.