அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின்  நிறுவனரும்,  பொதுச் செயலாளருமான சரத்குமார் கலந்து கொண்டார். இதில் பேசிய அ.இ.ச.ம.க-வின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஈஸ்வரன்,

மழை  வரலன்னா என்றால் தான் அதிசயம்…..  நாட்டாமை பாதம் பட்டால் வெள்ளாமை விளையும்….. கண்டிப்பா மழை வரும்….  நீங்க பொட்ட காடாக இருந்தா கூட அந்த இடம்  வெள்ளாமை  விளைஞ்சு, பச்சை பச்சென்று ஆயிரும்….  அப்படிப்பட்ட தலைவர் நம் தலைவர்….  நீங்க நல்லா நினைச்சுக்கோங்க….  ஒரு நல்ல மனிதர்…… அடுத்தவங்க மனச குளிர வைத்தே பார்த்த ஒரு மனிதர்….. அவர் இன்னைக்கு நெல்லையில் கால் வைத்திருக்கிறார் என்றால்,  இந்த மண்னு  குளிராமையா போகும்…. கண்டிப்பா குளிரும்….

அங்க புயல் சென்னையில் மையம் கொண்டு,  ஆந்திரா பக்கம் ஓடிடுச்சு….. ஆனால் நெல்லையில் ”சமத்துவ புயல்”  மையம் கொண்டுதான் இருக்கிறது… நீங்க தெரிஞ்சுக்கோங்க……  தெற்கு இல்ல….  கிழக்கு இல்ல… மேற்கு இல்ல….  வடக்கு இல்ல…. எங்கு சென்றாலும் நம்முடைய நாட்டாமை தாங்க. சிந்திச்சு பாருங்க…. அன்று 1954 முதல் 1963 வரை ஒரு பொற்கால ஆட்சியை தந்த யாரு ? நம்ம அப்புச்சி….  யாரு நமது பெருந்தலைவர்…..  அப்படிப்பட்ட பெருந்தலைவர்களுக்கு அடுத்து தமிழ்நாட்டில் யாராவது ஒரு உத்தமனை கை காட்ட முடியுமா ?

ஆனால் நான் காட்டுறேன்….  அடுத்த உத்தமன் நம் நாட்டமைதான். எந்த திராவிட கட்சிகளும் யோக்கியன் சொல்லிட முடியாது. எனக்கு முன்னால் பேசிய  அண்ணன் கன்னியாகுமரியில் இருந்து அழகா சொன்னாரு….  ஏழரை லட்சம் கோடி கடன் இருக்கு தமிழ்நாட்டுல…. சிந்திச்சு பாருங்க…. ஏழரை லட்சம் கோடி….. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னால் செய்தித்தாளில் பார்த்தேன்….  ஒரே ஒரு அமைச்சரோட சொத்து பட்டியல் ED ரெய்டுக்கு அப்பறோம்…

2 லட்சம் கோடி அவர்கிட்ட மட்டும் இருக்கா…… ஒரே ஒரு அமைச்சர்கிட்ட, தமிழ்நாட்டுல…. செய்தித்தாளில் பார்த்தேன்….. அப்ப தமிழ்நாட்டில் ஆண்ட கட்சிகள், திராவிட கட்சிகளில் எத்தனை அமைச்சர்கள் இருக்காங்க ? இன்னைக்கு ஆண்டு கிட்டு இருக்கிற கட்சியில EDஇல்  உள்ளே உட்கார்ந்திருக்கிறவரையும் சேர்த்துக்கோங்க…. அவங்க கிட்ட எல்லாம் எத்தனை லட்சம் கோடி இருக்கும். இதெல்லாம் சேர்த்தா தமிழ்நாடு செல்வ செழிப்பு மிக்க மாநிலமாகிடுங்க என தெரிவித்தார்.