தந்தையும், மகளும் ஸ்கூட்டரில் செல்லும் ஒரு சாதாரண காட்சிதான் இது. ஆனால், அதில் ஒளிந்திருக்கும் அந்தத் தந்தையின் அக்கறைதான் இன்று கோடிக்கணக்கான இதயங்களை வென்றுள்ளது.
வீடியோவில், ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்திருக்கும் சிறுமி நன்றாக உறங்கி வழிகிறார். அவர் கீழே விழுந்துவிடக் கூடாது என்பதற்காக, அந்தத் தந்தை தனது இடது கையால் மகளை பலமாக அணைத்துக் கொள்கிறார். வலது கையால் மட்டுமே ஸ்கூட்டரை பேலன்ஸ் செய்தபடி மெதுவாக ஓட்டிச் செல்கிறார்.
View this post on Instagram
பின்னால் வந்த மற்றொரு வாகனத்தில் இருந்தவர் இந்த அழகிய தருணத்தைப் படம்பிடித்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், “அப்பாக்கள் எப்போதும் அமைதியான போராளிகள் (Silent Warriors)” என்றும், “பெற்றோர்கள் உங்களுக்காக என்ன செய்தார்கள் என்று ஒருபோதும் கேட்காதீர்கள், அவர்களின் ஒவ்வொரு செயலும் உங்களுக்காகத்தான்” என்றும் எமோஷனலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
