ரெஸ்டாரண்டுகளுக்குச் சென்று நமக்கு பிடிச்ச உணவை ஆர்டர் பண்ணி சாப்பிடுறதுல ஒரு தனி சந்தோஷம் உண்டு. ஆனா, நாம கேக்குற சின்னச் சின்ன மாற்றங்களுக்குக் கூட சில உணவகங்கள் போடுற விசித்திரமான பில்களைப் பார்த்தா, சாப்பாட்டு மேசையிலயே தலைசுத்தி விழுந்துடுவோம் போல.

அந்த மாதிரி ஒரு அதிர்ச்சிகரமான அனுபவம்தான் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பிரபல கேஃபே ஒன்றில், வாப்மிதா சிங் என்ற பெண் சோஷியல் மீடியா பிரபலத்திற்கு நடந்துள்ளது. அவர் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த அனுபவம், தற்போது இணையவாசிகளிடையே மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு கேஃபேவுக்குச் சென்ற வாப்மிதா சிங், தனக்காக ஒரு சான்ட்விச்சை ஆர்டர் செய்துள்ளார். அதில் சீஸ் சேர்க்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, சீஸை நீக்கிவிட்டு தருமாறு உணவக ஊழியரிடம் கேட்டுள்ளார்.

வழக்கமாக ஒரு பொருளைக் கூடுதலாகக் கேட்கும்போது கட்டணம் வசூலிப்பது இயல்புதான். ஆனால், சான்ட்விச்சில் இருந்து சீஸை நீக்குவதற்கே தனியாகக் கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டிருந்த பில்லைப் பார்த்ததும் அவருக்குத் தூக்கி வாரிப்போட்டுள்ளது. ஒரு பொருளைச் சேர்க்காமல் விடுவதற்குக் கூடக் கட்டணமா என்ற அதிர்ச்சியில், அந்த பில்லைத் தனது வீடியோவில் காட்டிப் புலம்பத் தொடங்கிவிட்டார்.

இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியான சில மணி நேரங்களிலேயே காட்டுத்தீ போல வைரலானது. “நாம ஒரு பொருளைச் சேர்க்கச் சொன்னா காசு கேக்குறதுல நியாயம் இருக்கு, ஆனா சேர்க்காதீங்கன்னு சொல்றதுக்கு எதுக்குப்பா காசு?” என்று நெட்டிசன்கள் பலரும் அந்த உணவகத்தின் விசித்திரமானக் கட்டணக் கொள்கையைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் உணவகங்கள் வாடிக்கையாளர்களை எப்படிப்பட்ட விசித்திரமான வழிகளிலெல்லாம் பில் போட்டு ஏமாற்றுகின்றன என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி என்று பலரும் தங்களது ஆதங்கமான கமெண்ட்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

“>