மரணம் என்பது எப்போதுமே துயரமும் அமைதியும் சூழ்ந்த ஒரு சூழல். உறவினர்களும் நண்பர்களும் கருப்பு அல்லது வெள்ளை நிற ஆடைகளை அணிந்து, கண்ணீரோடு அஞ்சலி செலுத்துவதுதான் உலகம் முழுவதும் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் வழக்கம்.
ஆனால், தன் உயிர்த்தோழனின் இறுதிச்சடங்கிற்கு ஒரு நபர், கண்ணைப் பறிக்கும் பிரகாசமான ‘பங்க்’ நிற சாாக்ஸ்களும், ‘நியோன்’ நிறப் பெண்களுக்கான கவுனும் அணிந்து வந்த காட்சி, அங்கிருந்தவர்களை அதிர்ச்சியிலும், இணையவாதிகளை ஆழ்ந்த நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு கேலிக்கூத்தாகவோ அல்லது இறந்தோரை அவமதிக்கும் செயலாகவோ தோன்றலாம். ஆனால், இந்த வித்தியாசமான உடைக்கு பின்னால் ஒரு ஆழமான, இதயத்தை உருக்கும் நட்புக்கதை ஒளிந்திருக்கிறது.
இறந்துபோன நண்பனும், இந்த நபரும் சிறுவயது முதலே பிரிக்க முடியாத தோழர்களாக வாழ்ந்து வந்தவர்கள். ஒருமுறை இருவரும் ஜாலியாகப் பேசிக்கொண்டிருந்தபோது, “நம்மள யாராவது ஒருத்தர் முதல்ல இறந்துட்டா, உயிரோட இருக்குறவன் இறுதிச்சடங்குக்கு பொண்ணுங்க போடுற மாதிரி கேலியான நியோன் டிரெஸ் போட்டுட்டுதான் வரணும்” என்று ஒரு நகைச்சுவையான வாக்குறுதியை பரஸ்பரம் கொடுத்துக்கொண்டனர்.
தான் கொடுத்த அந்த வாக்குறுதியை, நண்பன் இறந்த அந்தத் துயரமான நாளிலும்கூட மறக்காமல் நிறைவேற்றியுள்ளார் அந்த உண்மையான தோழன். சுற்றிலும் இருந்தவர்கள் விசித்திரமாகப் பார்த்தபோதிலும், உலகத்தின் விமர்சனங்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், நண்பனுக்காகக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவர் அந்த ஆடையை அணிந்து வந்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும் “ஆடை முக்கியமில்லை, இதயத்தில் இருக்கும் அன்பும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நேர்மையும்தான் உண்மையான நட்பு” என்பதை உணர்த்தும் இந்த சோகமும் நெகிழ்ச்சியும் கலந்த சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் கண்களையும் குளமாக்கி வருகிறது.\
