சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ தீயாய் பரவி வருகிறது. அதில் ஒரு பள்ளி ஆசிரியர் வகுப்பறையில் உள்ள மாணவர்களின் மதிய உணவுப் பெட்டிகளை (Lunch Boxes) வரிசையாகச் சோதனையிடுகிறார். அப்போது அவர் கண்ட காட்சிகள் அதிர்ச்சியையும், கவலையையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.

ஒரு மாணவன் தனது மதிய உணவாக வெறும் பிஸ்கட்களை மட்டுமே கொண்டு வந்துள்ளான். மற்றொரு மாணவனின் தட்டில் ஒரு துண்டு கேக் மட்டுமே உள்ளது.

பல மாணவர்கள் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், சிப்ஸ், டோனட்ஸ் மற்றும் பிரஞ்சு பிரைஸ் (French Fries) போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளையே மதிய உணவாகக் கொண்டு வந்துள்ளனர்.

அந்த வகுப்பறையில் இருந்த அனைத்து மாணவர்களில் ஒரே ஒரு மாணவன் மட்டுமே சத்தான ரொட்டி மற்றும் காய்கறி உணவைக் கொண்டு வந்துள்ளான். ஒரு சில மாணவர்கள் பழங்கள் கொண்டு வந்துள்ளனர்.

இதைப் பார்த்த அந்த ஆசிரியர், “வளரும் குழந்தைகளுக்கு இது போன்ற உணவுகள் ஆரோக்கியமற்றவை. இதை இனி பள்ளிக்குக் கொண்டு வரக்கூடாது” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

90-களில் அம்மாவால் அன்போடு தயார் செய்யப்பட்ட காய்கறி சாதம், பருப்பு சாதம் போன்றவற்றின் இடத்தை இன்று ‘ரெடி-டு-ஈட்’ (Ready-to-eat) உணவுகள் பிடித்துவிட்டதை இந்த வீடியோ பட்டவர்த்தனமாகத் தோல் உரித்துக் காட்டுகிறது.