சாதாரணமாக ஒரு சிறிய பாம்பைப் பார்த்தாலே நாம் அலறி அடித்து ஓடுவோம். ஆனால், ஒரு நபர் ஆழ்கடலில் நீந்திக் கொண்டிருக்கும்போது, உலகின் மிகப்பெரிய பாம்புகளில் ஒன்றான அனகோண்டாவை நேருக்கு நேர் சந்தித்துள்ளார்.
இந்த வீடியோவில், ஒரு டைவிங் வீரர் தண்ணீருக்கு அடியில் நீந்திக் கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கு முன்னால் சுமார் 8 மீட்டர் நீளம் கொண்ட ஒரு ராட்சத அனகோண்டா படுத்திருக்கிறது.
அந்த பாம்பு மெதுவாகத் திரும்பி அந்த நபரின் கண்களை உற்றுப் பார்க்கிறது. அந்த நொடியில் அந்த வீரருக்கு ‘சிறுநீரகமே’ வெளியே வந்துவிடும் போல ஒரு பயம் ஏற்பட்டுள்ளது.
27 seconds of unreleased diving with an 8 meter long and 200kg weight anaconda snake 🐍
She let me accompany her, she stopped for me to observe her in detail and posed for another photo worthy of @chronicalguyWhen he got tired, he changed direction and looked me in the eyes,… pic.twitter.com/TDNvDHccwa
— Chronic (@chronicalguy) January 29, 2026
ஆனால், ஆச்சரியப்படும் விதமாக அந்த அனகோண்டா அவரைத் தாக்கவில்லை. மாறாக, அவருக்கு போஸ் கொடுப்பது போல அங்கேயே சிறிது நேரம் நின்றிருந்தது.
அந்த வீரர் மன்னிப்பு கேட்பது போல சைகை செய்ய, அந்தப் பாம்பு அவரது உடலை மெதுவாக உரசிக் கொண்டு அங்கிருந்து கடந்து சென்றது.
எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட இந்த 27 விநாடி வீடியோவை இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். “இதையெல்லாம் பார்க்கவே பயமாக இருக்கிறது, இது ஒரு அற்புதமான அனுபவம்” என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
