விருந்தாவனைச் சேர்ந்த பிரபல ஆன்மீக குரு பிரேமானந்த் ஜி மகாராஜின் (Premanand Ji Maharaj) சத்சங்க நிகழ்வு ஒன்றில், பக்தர் ஒருவர் ஒரு சுவாரசியமான கதையைப் பகிர்ந்துள்ளார்.

அந்த பக்தர் தனது காரில் செல்போனை வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது ஒரு நபர் காரில் இருந்த போனைத் திருடிக்கொண்டு தப்பியோட முயன்றுள்ளார். ஆனால், அந்த போனை கையில் எடுத்துப் பார்த்த திருடன், அப்படியே உறைந்து நின்றுவிட்டான்.

 

View this post on Instagram

 

A post shared by KIDDAAN | Vlueprints | (@kiddaan)

போனின் டிஸ்பிளேவில் (Wall Paper) பிரேமானந்த் மகாராஜின் புகைப்படம் இருந்துள்ளது. குருவின் முகத்தைப் பார்த்ததும் பயமோ அல்லது பக்தியோ வந்த அந்தத் திருடன், உடனடியாக காரின் உரிமையாளரைத் தேடிச் சென்று போனைத் திருப்பி அளித்துள்ளான்.

“உங்க குரு இவர்தானா? இதோ பிடிங்க உங்க போன்.. இவருக்காகத்தான் இதைக் கொடுக்கிறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாராம் அந்தத் திருடன்.

இந்தக் கதையைக் கேட்டு அங்கிருந்தவர்கள் சிரித்தபோது, பிரேமானந்த் மகாராஜ் மென்மையாகச் சிரித்தபடி, “இதெல்லாம் அந்த பகவானின் லீலை.. எல்லாம் அவரே செய்கிறார்” என்று நெகிழ்ச்சியுடன் பதிலளித்தார்.