சாலைகளில் வாகனங்களை ஓட்டும்போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சாட்சியாக அமைந்துள்ளது. ஒரு கார் டிராஃபிக் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்ததால் மெதுவாக வந்து நிற்கிறது.
சிக்னலில் கார் நின்ற அதே நேரத்தில், பின்னால் மின்னல் வேகத்தில் ஒரு பைக் வருகிறது. பைக்கை ஓட்டி வந்த நபர் பிரேக் போடுவதற்குள், நின்றிருந்த காரின் பின்புறத்தில் பைக் பயங்கரமாக மோதியது.
View this post on Instagram
மோதிய வேகத்தில் பைக்கை ஓட்டி வந்த இளைஞர் பந்தைப் போல காருக்கு மேலாக அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் காரின் பின்புறம் மற்றும் பைக் உருக்குலைந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த இளைஞர் பெரும் காயங்களுடன் உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது.
‘loknath4503’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கான மக்கள் பார்த்துள்ளனர். “இதையெல்லாம் பார்த்தால் வண்டி ஓட்டவே பயமாக இருக்கிறது” என்றும், “அதிவேகம் தான் விபத்திற்கு முக்கிய காரணம்” என்றும் நெட்டிசன்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
