புனேவின் கல்யாணி நகர் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 19 அன்று நபர் ஒருவர் சாலையோரமாக நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் திடீரென அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தங்களை ஏன் முறைத்துப் பார்த்தீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர்கள், அவரைத் கொலை மிரட்டல் விடுத்து அவரிடமிருந்த 15,000 ரூபாயைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினர்.

இந்தச் சம்பவம் குறித்து அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட நபர் எரவாடா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கினர். குற்றவாளிகளைக் கண்டறிய அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள 87 கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை (சிசிடிவி) போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

தொழில்நுட்பப் பகுப்பாய்வு மற்றும் ரகசியத் தகவல்களின் அடிப்படையில் குற்றவாளிகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்த போலீசார், அவர்கள் ஹடப்சார் பகுதியில் பதுங்கியிருப்பதைக் கண்டுபிடித்தனர். மேலும், கைதான இருவரும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பழைய குற்றவாளிகள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

“>

 

எரவாடா மற்றும் ஹடப்சார் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், நிகில் மற்றும் அயன் நாசிர் ஷேக் ஆகிய இரண்டு பேரைக் கைது செய்தனர். காவல்துறையினரின் விசாரணையில் அவர்கள் கைபேசியில் பேசிய நபரிடம் பணம் பறித்ததை ஒப்புக்கொண்டனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.