தமிழகத்தில் மழை,  வெள்ளம் பாதிப்புகளில் ஒன்றிய அரசிடம் நிவாரணம் கேட்டாங்க.  ஆனால் கொடுக்காத ஒன்றிய அரசு,  பிரதமர் மோடி படத்துடன் கூடிய செல்பி பாய்ண்ட்டை ரயில் நிலையங்களில் அமைப்பதற்காக நிதி ஒதுக்கி இருக்காங்க. இதை எப்படி பார்க்கிறீர்கள் ? என்ற கேள்விக்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,

நானும் கவனிச்சிட்டு தான் இருக்கேன். நாங்க இத்தனை ஆயிரம் கோடி கேட்டோம்…. நாங்க  அத்தனை ஆயிரம் கோடி கொடுத்தோம். நாங்க இத்தனை ஆயிரம் கோடிக்கு கேட்டோம். அவங்க அத்தனை ஆயிரம் கோடி கொடுக்கல. அவங்க கொடுத்தாங்க.  காதுல கோடி கோடின்னு கேக்குது ஒருத்தனாவது ஓடி வந்து பாருங்கடா டேய். கோடி கோடின்னே பேசிட்டு  இருக்க…

காலத்தை இப்படியே ஓட்டி முடிஞ்சு போச்சு. இனி என்ன மறந்துடுவான். இந்த காச வாங்கி வச்சு….  நீ எழுதி வச்சுக்கோ….  அண்ணன் சொல்றேன்….. இப்ப தர மாட்டாங்க. தேர்தல் அறிவிச்ச பிறகு ஓட்டு காசு போல அந்த 6000 ரூபாயை கொடுத்து,  இதுதான் நடக்க போகுது. இப்போ கடைசியா ஒவ்வொரு ஆண்டுக்கும் பொங்கலுக்கு 1000 500 கொடுத்துட்டு இருந்தாங்க. இப்போதைக்கு காசு இல்லை என்கிறார்கள். என்னவோ, ஒன்னு  நடக்குது.

பொதுக்குழுல என்னதான் பேசுறது ? இங்க சொல்லிட்டா… பொதுக்குழுல என்னதான் பேசுறது ?  நீங்க இப்படி தான் பார்க்கணும். நான் போய் பிரதமரை சந்திச்சேன்னா….. அண்ணன் போய் பிரதமரை சந்திச்சா நான்  சங்கீயா ? இல்லையா ?ஆனால் நீங்க  அப்பாவும், மகனும்    ஒரே நாள்ல சந்திச்சா அதுக்கு பேர் என்ன ? இங்க பக்கத்திலேயே உட்கார்ந்து இருந்தீங்க.  அப்ப எதுவும் பேச முடியாது….  அப்போ மரியாதையா போய் பேசணும். போய் பேசினீங்க… என்ன பேசினீங்க ?

இப்போ தம்பி வந்து கேலோ  இந்தியா அப்படின்னு ஒரு விளையாட்டு. கேலோன்னா என்னன்னு சொல்லுங்க? ஹிந்தியில விளையாட்டாம். நீங்க போன வருஷம் எல்லாம் ஹிந்தி  தெரியாது போடான்னு சொன்னீங்க. இப்போ ஹிந்திலேயே கேலோன்னு இருக்கு. மகளிர் காங்கிரஸ்னு கூட வைக்க மாட்டாங்க. மகிலா காங்கிரஸ்.   இந்த கொடுமை எல்லாம்  என்ன  சொல்றது பாருங்க ? என கேள்வி எழுப்பினார்.