கிளம்பாக்கம் பேருந்து நிலையம் வளர்ச்சி, தொலைநோக்கு பார்வை என்று அரசு சொல்வது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சீமான்,

நீங்கள் அவ்வளவு தொலைநோக்கு வாய்ந்த ஆட்களா ? சென்னைய தலைநகரில்…. பெரு மாநகரில் ஒரு பேருந்து நிலையம் இருக்கா ?  இருந்தது ஒன்னு. அதையும்  மூடிட்டிங்க….  சென்னையில்  பெரு மாநகரில் ஒரு பேருந்து நிலையம் இருக்கா ? 110 கோடி செலவழிச்சு கட்டுனீங்க  அல்லவா ? இப்ப அதை என்ன பண்ண போறீங்க ? வணிக வளாகம்….  லுலுக்கு தானே…  லுலு மாலுக்கு கொடுக்க தானே இந்த வேலையை செய்றீங்க….  நான் கேட்டேனா ?

சென்னையில் இருந்து 40 கிலோ மீட்டர் அங்க கிளம்பாக்கம்….  அப்போ சென்னையில் ஒரு பேருந்து நிலையம் இல்லை அவ்வளவுதானே… ஒத்துக்கோங்க சென்னையில பேருந்து நிலையம் இல்ல.  40 கிலோ மீட்டர் அங்க இறங்கி,  அங்க இருந்து இங்க எப்படி வருவது.எப்படி வருவது ?  அந்த பேருந்து நிலையத்தை சுத்தி எத்தனை பள்ளிக்கூடங்கள் ?  எவ்வளவு மாணவர்கள் ? அவர்கள் சாலையை கடக்க நிறைய வாகனங்கள் வரும்போது,  எவ்வளவு கஷ்டப்படுவாங்க.

இதுதான் உங்க தொலைநோக்கா ? நீங்க கட்டுனீங்க…  அப்புறம் மதில் சுவரை இடிக்கிறீங்க…  யாரு கேட்டா ? இந்த பேருந்து நிலையத்தை…. அதுல 70 விழுக்காடு அதிமுக ஆட்சியில் பண்ணிட்டாங்க….  நீங்க வந்து 18 கோடி,  20 கோடி போட்டு முடிச்சுட்டீங்க. அதுல என்ன ? உதயசூரியன் சின்னம் வேண்டி கிடக்கு. தம்பி உதயநிதி கேக்குறாரு உங்க அப்பன் வீட்டுக்கு காசா?ன்னு….  இதுல நான் கேட்கிறேன்,  இது உங்க அப்பன் வீட்டு காசா ? உங்க தாத்தா வீட்டுக் காசா ? எதுக்கு உங்க தாத்தா பெயரை வைக்குற…. எதுக்கு வைக்கிற ? என கேள்வி எழுப்பினார்.