கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வசிஷ்டபுரம் பகுதியில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக அந்த பகுதியைச் சேர்ந்த மலர் என்பவரிடம் ரூ.9 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். இவர் இந்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார்.

இது தொடர்பாக மலர் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் மலர் ராஜேஸ்வரி வீட்டிற்கு சம்பவ நாளில் சென்று கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது ராஜேஸ்வரியும் அவருடைய கணவரும் சேர்ந்து மலரை கல்லால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திட்டக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.