குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள காலுபூர் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பு செய்து உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் 16 மாடிக் கட்டிடமாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காக அந்தப் பகுதியில் இருந்த 75 ஆண்டுகள் பழமையான மற்றும் பயன்பாட்டில் இல்லாத 60 அடி உயரமுள்ள தண்ணீர் தொட்டியை இடிக்க அகமதாபாத் மாநகராட்சி முடிவு செய்தது.
View this post on Instagram
மிகவும் உயரமாக இருந்த இந்தத் தொட்டியை இடிப்பது சவாலான காரியம் என்பதால், ஒரு ராட்சத கிரேன் உதவியுடன் எட்டு டன் எடையுள்ள ஜேசிபி இயந்திரம் தண்ணீர் தொட்டியின் உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இரண்டு பணியாளர்களின் உதவியுடன் அந்த இயந்திரம் தண்ணீர் தொட்டியை இடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏதேனும் விபத்து ஏற்பட்டால் இழப்பீடாக வழங்க ஒரு கோடி ரூபாய் அளவிற்கு காப்பீடு செய்யப்பட்ட நிலையில், அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி இந்த இடிப்புப் பணி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
