இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
You’ve got to check this out! 🥰 pic.twitter.com/EOagIOYExx
— This Account Makes You Happy (@FeelYouHappy) July 18, 2025
அதாவது இந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் தனது தந்தையின் அருகே படுத்திருக்கிறார். அப்போது அவர் தனது தந்தையிடம் அவரது கால்களில் முத்தம் கொடுக்க கேட்கிறார். அதன்படி அவரது தந்தையும் முத்தமிடுகிறார். அதன் பின் கைகளில் கேட்கிறார். அதையும் அவரது தந்தை செய்கிறார்.
இதையடுத்து கண்கள், மூக்கு, உதடு போன்ற இடங்களில் முத்தம் கேட்கிறார். அதையும் அவரது தந்தை செய்கிறார். அதன் பின் அவர்கள் இருவரும் சிரித்துக்கொண்டு கொஞ்சி விளையாடுகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
