குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் நேற்று முன்தினம் ஒருவர் தன்னுடைய ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு சொகுசு கார் வேகமாக வந்தது. இந்த கார் கண்ணிமைக்கும் நொடியில் எதிர்பாராத விதமாக ஸ்கூட்டியின் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஸ்கூட்டியில் சென்ற நபர் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்தில் பலியானார். அந்த சொகுசு கார் ஒரு மரத்தில் மோதி நின்ற நிலையில் காரில் வந்தவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ள நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மது போதையில் அவர் சொகுசு காரை ஓட்டி வந்ததால் இந்த விபத்து நடந்தது தெரியவந்தது. மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு கார் ஓட்டுநர் கைது செய்யப்படுவார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
This accident happened just walking distance from my home. Sadly, there are no proper speed breakers on this road.
Requesting @GandhinagarMC to pls install speed breakers to prevent such accidents.
📍Sargasan, Gandhinagar#Gandhinagar@BJP4Gujarat @Divya_Bhaskar , @timesofindia pic.twitter.com/5cXGUcd1aN— Darshan Thakkar (@codewithdarshan) July 17, 2025
